Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் விமான விபத்து: அல்ஜீரிய விமானம் விழுந்து 116 பேர் பலி

Webdunia
வியாழன், 24 ஜூலை 2014 (19:04 IST)
மாயமானதாக சந்தேகிக்கப்பட்ட அல்ஜீரிய விமானம் விழுந்து ஓட்டிச் சென்ற விமானிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 116 பேர் உயிரிழந்தனர்.

பர்கினா ஃபாசோவில் இருந்து புறப்பட்ட ஏ.எச்.5017 என்ற விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியது. விமானம் நொறுங்கியதில் விமானிகள் 2 பேர், பணியாளர்கள் 4 பேர், பயணிகள் 110 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பர்கினா ஃபாசோவில் அவ்கடூகு நகரில் இருந்து புறப்பட்ட 50 நிமிடங்களில் விமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
 
இது இந்த மாதத்தில் நடக்கும் 2வது பெரிய உயிரிழப்பு சம்பவம் ஆகும்.  நெதர்லாந்து தலைநகரில் இருந்து சென்ற மலேசிய விமானம் உக்ரைன் எல்லையில் கடந்த 17 ஆம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் உயிரிழந்தனர்.
 
மலேசியாவுக்கு சொந்தமான மற்றொரு விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பில்ஜிங் சென்ற போது மார்ச் 8 ஆம் தேதி மாயமானதும் குறிப்பிடத்தக்கது.
 
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் பரபரப்பு அடங்குவதற்குள் அல்ஜீரியாவை சேர்ந்த மற்றொரு விமானம் திடீரென விபத்துக்குள்ளானது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

Show comments