Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஆவது முறையாக பிரதமர் ஆகிறார் ஷேக் ஹசீனா – வங்கதேச தேர்தல் முடிவுகள்

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (12:11 IST)
வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலி ஆளும் ஆவாமி லீக் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

வங்கதேசத்தைக் கடந்த மூன்று ஆட்சிக் காலமாக ஆவாமி லீக் கட்சி ஆண்டு வருகிறது. அதன் தலைவரான ஷேக் ஹசீனா மூன்று முறையும் பிரதமர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமரின் பதவிக்காலம் முடிவதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்ப்ட்டது.

அறிவிக்கப்பட்ட படி நேற்று 299 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் அழைக்கப்ப்ட்டன. இருப்பினும் தேர்தலின் போது நடைபெற்ற வன்முறை சம்ப்வங்களால் 17 பேர் கொல்லப்பட்டனர்.

வாக்குப்பதிவை அடுத்து இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. தேர்தலின் போது ஆளும் ஆவாமி லீக் கட்சிக்கும் பங்களாதேஷ் தேசிய வாதக் கட்சிக்கும் கடுமையானப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட ஆவாமி லீக் கட்சி அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியை அமைத்துள்ளது.

ஆவாமி லீக் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக 266 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க உள்ளனர். அக்கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா மீண்டும் நான்காவது முறையாக பிரதமராகப் பதவியேற்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments