Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய் இருப்பதாகக் கூறி பணம் வசூலித்து டூர் சென்ற பெண் கைது

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (13:44 IST)
ஆஸ்திரேலியாவில் புற்றுநோய் இருப்பதாக கூறி பணம் வசூலித்து சுற்றுலா சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் டிகன்சன் (24).  இந்த பெண் தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான மருத்துவ உதவி செய்ய பல லட்சம் தேவைப் படுவதாகவும், தனக்கு உதவும் படியும் சமூக வலைதளங்களில் தனது போட்டோவுடன் பதிவு செய்திருந்தார்.
 
இதனை நம்பிய பலர், இவரது சிகிச்சைக்காக பல லட்சம் ரூபாயை வழங்கினர். அந்த பணத்தை அவர் தனது கோடை விடுமுறை கொண்டாட்டத்துக்காக செலவு செய்தார்.
 
இதுகுறித்து ஒரு நபர் போலீசில் புகார் செய்தார். அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு  3 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இப்படி ஏமாத்து வேலை செய்யும் நபர்களால் தான் உதவ நினைக்கும் நபர்களும், உதவி செய்ய மறுக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments