Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'துணிவு' பட கொண்டாட்டத்தின் போது ரசிகர் பலி!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (14:54 IST)
'துணிவு 'பட கொண்டாட்டத்தின் போது, லாரியில் ஏறி நடனம் ஆடிய போது ரசிகர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர்  நடிப்பில்,ஹெச்.வினோத் இயக்கத்தில்   போனி கபூர் தயாரிப்பில் இன்று அதிகாலையில் வெளியான படம் துணிவு.

அஜித்தின் ஒவ்வொரு பட ரிலீஸின் போது பெரும் எதிர்பார்ப்பும் கொண்டாட்டமும் இருக்கும் நிலையில், துணிவு படத்தையும் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.

இந்த நிலையில், சென்னையில் ரோகிணி தியேட்டரில் துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் பரத்குமார் (19) லாரியில் ஏறி நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று கீழே விழுந்தார்.

இதில், பரத்குமார் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments