Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயை காப்பாற்ற கொலை செய்த 6 வயது சிறுவன்.......

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2016 (12:14 IST)
தென் ஆப்பிரிக்காவில் தாயை கற்பழிக்க முயன்றவனை 6 வயது சிறுவன் பாட்டிலால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
தென் ஆப்பிரிக்காவில் வடக்கு கேப் பகுதியைச் சேர்ந்தவர் செகோமோட்சோ கேர்சேவ். இவர் தனது 6 வயது மகன் குட்ல்வானோ கேர்சேப் அவனது அண்ணன் தபிசோ (8) ஆகியோரை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
 
வழியில் ஒரு மர்ம நபர் திடீரென குறுக்கிட்டு அவரிடம் பணம் கேட்டான். அவர் தர மறுக்கவே, ஆத்திரமும், கோபமும் அடைந்த அவன் செகோமோட்சோவை தாக்கி கீழே தள்ளினான். இந்நிலையில் அந்த மர்ம நபர் செகோமோட் சோவை கற்பழிக்க முயன்றான். அவனிடம் இருந்து தப்ப அவர் போராடினார்.
 
இதைப் பார்த்த 6 வயது குட்லவானோ கேர்சேப் அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து தாயை கற்பழிக்க முயன்றவனை சரமாரி குத்தினான். இதனால் படுகாயம் அடைந்த அவன் அதே இடத்தில் இறந்தான்.
 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!

வெட்டிங் லோன்.. திருமண கடன் வழங்கும் மேட்ரிமோனியல் இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments