Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

25 மணி நேரமாக மாறும் 24 மணி நேரம்: காரணம் என்ன??

25 மணி நேரமாக மாறும் 24 மணி நேரம்: காரணம் என்ன??
, திங்கள், 12 டிசம்பர் 2016 (11:42 IST)
பூமியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


 
 
கடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பூமியானது தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. 
 
இந்நிலையில், இந்த இரண்டு மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் எனக் கூறப்படுகிறது. எனவே அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது மாறி 25 மணி நேரமாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
மேலும், பூமியில் ஏற்பட்டு வரும் சில மாற்றங்களால் இந்த நேர மாற்றம் ஏற்பட இருப்பதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக காற்று மாசுபாடு காரணமாக காற்றின் அடர்த்தி அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரியன் தற்போது இருப்பதை விட 100 மடங்கு பெரிதாகும்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!!