Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனை விஷம் வைத்து கொன்ற 14 வயது சிறுமி; பலாத்காரத்திற்கு முயன்றதாக குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2014 (18:31 IST)
கணவனை விஷம் வைத்துக் கொன்றதாக 14 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், கணவர் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக சிறுமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
நைஜீரியாவில் உள்ள கானோ பகுதியைச் சேர்ந்த உமர் சானி என்பவர் முதல் மனைவி உயிருடன் உள்ளபோதே இரண்டாவதாக அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துள்ளார்.
 
திருமணத்திற்கு மறுநாள் இரவு அன்று முதல் மனைவியும், சிறுமியும் சேர்ந்து சமைத்துள்ளனர். அதன் பிறகு சாப்பிட்ட உமர் வாயில் நுரை தள்ளி பலியானார். அவரை சிறுமிதான் விஷம் வைத்து கொலை செய்ததாக போலீசார் அவரை கைது செய்தனர்.
 
இந்நிலையில், உமர் சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. மேலும் சிறுமியை நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாது என்றும், அவரை சிறுவர் நீதிமன்றத்தில் தான் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
 
இந்நிலையில் கணவர் உமருக்கு உணவில் எலி விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக சிறுமி நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். கணவருக்கு விஷம் வைத்து கொன்ற சிறுமிக்கு மரண தண்டனை அளிக்குமாறு அரசு வழக்கறிஞர்கள் வாதாடினார்.
 
இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

Show comments