Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 பயணிகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு: அச்சத்தில் ரன்வேயில் நிறுத்தப்பட்ட விமானம்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (15:53 IST)
விமானத்தில் பயணம் செய்த 13 பயணிகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ளது என்ற தகவல் வெளியானதை அடுத்து அந்த விமானம் ரன்வேயில் நிறுத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து ஆம்ஸ்டர்டாம் வந்த விமானம் ஒன்றில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு 13 பயணிகள் இருப்பதாக செய்திகள் வெளியானது
 
இதனை அடுத்து அந்த பயணிகளுடன் இருக்கும் விமானம் ஆம்ஸ்டர்டாம் ரன்வேயில் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் 13 பேர்களும் பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர் என்பதும் அவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
மேலும் விமானத்தில் உள்ள மற்றவர்களுக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவி இருக்கலாம் என்ற பீதி ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த விமானம் ரன்வேயில் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments