Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'காஸா போர் : இஸ்ரேல் மீதான ஐ.நா. குற்றச்சாற்று ஒருதலைபட்சமானது'

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2009 (15:28 IST)
காஸா போரின்போது இஸ்ரேல் படை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐ.நா. விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது ஒருதலைபட்சமானது என்று அமெரிக்க அயலுறவுத் த ுறை அமைச்சர ் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.

நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், இது தொடர்பாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல பரிந்துரைகளை இஸ்ரேல் ஏற்கனவே உரிய முறையில் செயல்படுத்தியுள்ளதாக கூறினார்.

கடந்த 2008 டிசம்பர் மற்றும் 2009 ஜனவரி மாதங்களில் நடைபெற்ற காஸா போரின்போது இஸ்ரேல் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாற்று எழுந்த நிலையில், இது குறித்த விசாரிப்பதற்காக ஐ.நா. உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க நீதிபதி ரிச்சர்ட் கோல்ஸ்டோன் தலைமையிலான இக்குழுவினர் நடத்திய விசாரணையில், இஸ்ரேல் வீரர்கள் போர் குற்றத்தில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments