Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரின் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட ஐ.நா. பட்டியலில் இலங்கை!

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (11:05 IST)
ஐ.நா. பொதுச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு போர்களின் போது பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 21 நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளது.
 
ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆகிய நாடுகளில் நடந்த  மோதல்களில் பாலியல் வன்முறைகள் நடந்துள்ளன இது தொடர்பான ஐ.நா பொதுசெயலாளரின் சிறப்புப் பிரதிநிதி சான்னாப் ஹவா பங்குரா தெரிவித்துள்ளார். 
 
போராட்ட குழுவினர், ஆயுதக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் என, 34 ஆயுதக் குழுக்கள், மோதல் சூழலில் பாலியல் பலாத்காரம்  மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு உள்ளன.
 
இந்த பட்டியலில் ஸ்ரீலங்கா, அங்கோலா,போஸ்னியா ஹெர்சகோவினா, கம்போடியா, கினியா, லைபீரியா, லிபியா, நேபாளம், சியராலியோன், சோமாலியா, சூடான், யேமன், மத்திய ஆப்ரிக்க குடியரசு, ஐவரி கோஸ்ட், காங்கோ, மாலி, தென்சூடான், சிரியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 21 நாடுகள் இடம்பெற்றுள்ளன

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!