பார்வதி அம்மாள் உடல் தகனம் செய்யப்பட்டது

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2011 (19:58 IST)
FILE
ஞாயிற்றுக் கிழமை காலை உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
பார்வதி அம்மாளின் கணவர் அமரர் வேலுப்பிள்ளையின் ஒன்று விட்ட சகோதரர் சங்கர நாராயணன் சிதைக்கு தீ மூட்டியதாக ஈழத் செய்திகள் கூறுகின்றன.

பார்வதி அம்மாளின் உடல் இன்று மாலை இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது, இராணுவத்தினரின் அச்சுறுத்தும் குவிப்பையும் மீறி, பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அன்னாரது பூதவுடல் வல்வெட்டித்துறையிலுள்ள அவர்கள் வாழ்ந்து வீட்டின் முன்பு கொண்டுவரப்பட்டு, அங்கு 10 நிமிட நேரம் வைக்கப்பட்டிருந்ததாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் செய்தி இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இறுதி நிகழ்வின்போது உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் தொலைபேசி ஊடாக வழங்கிய இரங்கலுரைகள் ஒலிப்பரப்பப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமசந்திரன், விநோகதரலிங்கம், சிவசக்தி ஆனந்தன், பா.அரியேந்திரன், யோகேஸ்வரன், ஸ்ரீதரன், சரவணபவன், கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா உள்ளிட்ட பல தலைவர்கள் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இரங்கலுரை நிகழ்த்தியுள்ளனர்.

இந்நிகழ்வுகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்பட செய்தியாளர்களை சிறிலங்க இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியது மட்டுமின்றி, அவர்களின் அடையாள அட்டைகளையும் புகைப்படமெடுத்ததாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதச்சார்பின்மை பற்றி பேச முதல்வருக்கு எந்த தகுதியும் இல்லை: நயினார் நாகேந்திரன்

பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

தவெக ஜெயிக்காது.. விஜய் செய்றது தப்பு.. தெறிக்கவிட்ட ரங்கராஜ் பாண்டே...

மெஸ்ஸி இந்தியா வர சம்பளம் மட்டும் ரூ.89 கோடி.. மொத்த செலவு ரூ.100 கோடி.. அதிர்ச்சி தகவல்..!

தவெகவில் இணைந்த பத்திரிக்கையாளர் பெலிக்ஸ்!.. சவுக்கு சங்கர்தான் காரணமா?..

Show comments