நெப்டியூனின் மிக சிறிய துணைக்கோள் கண்டுபிடிப்பு

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2013 (12:49 IST)
FILE
நெப்டியூன் கிரகத்தின் 14 வது புதிய துணைக்கோளை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள பிற துணைக் கோள்களை விட இந்த புதிய துணைக்கோள் மிக சிறியதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய குடும்பத்தின் 8-வது கிரகமான நெப்டியூனின் புதிய துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறிய அளவில் உள்ள இதனை 1989 ஆம் ஆண்டு நெப்டியூனின் துணைக்கோள்களை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்கலத்தால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

தற்போது நாசாவின் ஹப்பில் விண்வெளி தொலை நோக்கி மூலம் இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எஸ்/2004 என் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் விட்டம் சுமார் 20 கிலோமீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மங்கலான கோள் என்றும் இதனை வெறும் கண்களால் காண முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோள் நெப்டியூன் கிரகத்தை சுற்றிவர 23 மணி நேரங்கள் எடுத்துக்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? பங்குச்சந்தையில் தாக்கம் இருக்காதே..!

பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொல்லணுமா?!.. தவெகவை சீண்டிய சேகர் பாபு!...

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப்பிரச்சினை அல்ல, அதிகார வர்க்கத்தின் 'ஈகோ' பிரச்சினை: தமிழிசை

20 ஆண்டுகளாக ஏழைகளின் வாழ்வாதாரம்: ஒரே இரவில் அழித்துவிட்டது மோடி அரசு: ராகுல் காந்தி

டெலிவரி செயலிகளில் இருந்து வெளியேற முடிவு செய்யும் உணவகங்கள்: என்ன காரணம்?

Show comments