நடக்கவோ, நகரவோ முடியாத நிலையில் செல்ல குரங்குகள்: மனிதர்களால் ஏற்படும் அவலம்
, ஞாயிறு, 5 ஜனவரி 2014 (16:13 IST)
இங்கிலாந்தில் வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் பெரும்பாலான குரங்குகள் உடற்பருமன் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மனிதர்களை போன்று குரங்கும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது அதிகரித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் நாய், பூனை போல குரங்குகளை வீட்டில் வளர்ப்பவர்கள் அதற்கு கொழுப்பு சத்து நிறைந்த உணவை அளிப்பதுதான் குரங்கு நீரிழிவு நோய் மற்றும் உடற்பருமனால் பாதிக்கப்பட காரணமென தெரிகிறது.
வீட்டில் வளர்க்கப்படும் குரங்குகளுக்கு பீட்சா, சிப்ஸ், சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகள் போன்ற துரித உணவுகளை உரிமையாளர்கள் கொடுக்கின்றனர்.இதனை சாப்பிட்டு வளர்வதால் அவைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.