Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்துகொண்ட இந்தியரின் சடலம் இந்தியா வருவதில் சிக்கல்

Webdunia
புதன், 1 ஜனவரி 2014 (15:54 IST)
ஓமன் நாட்டில் உள்ள குவேர் பகுதியில் ஒரு கட்டிடத்தின் பாதுகாவலராக பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த 52 வயதான அசோகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தொடர்பான விவரக் குறிப்புகள் இன்னும் இந்தியாவிலிருந்து அங்கு சென்றடையாததால் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் குழப்பம் நீடிக்கிறது.

அவர் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் அத்தகவல்கள் கிடைத்தவுடன் அவரது உடல் இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இறந்த அசோகனுக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

அசோகனின் மரணம் குறித்து அவரது நண்பர்கள் கூறுகையில், “அசோகன் நல்ல முறையில் பழகுவார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எங்களுக்கு தெரியவில்லை. அவருடன் அறையில் தங்கியிருந்த நபர், அவர் தூக்கில் தொங்கியதை முதலில் பார்த்தார். பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு அவரது உடல் வெளிக்கொண்டு வரப்பட்டது” என்று தெரிவித்தனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments