தி கிரே மேன் ஹீரோயின் ‘மர்லின் மன்றோ’வாக நடிக்கும் பிளாண்ட்… சினிமா ரசிகர்களைக் கவர்ந்த டிரைலர்!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (09:17 IST)
ஹாலிவுட் நடிகைகளில் அழியாப் புகழை பெற்றவர் மர்லின் மன்றோ. அவரது வாழ்க்கை வரலாறு ஏற்கனவே சில முறை படமாக்கப்பட்டுள்ளது.

உலக சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் மர்லின் மன்றோ. ஹாலிவுட் சினிமாக்களில் நடித்து புகழ் பெற்ற அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவரின் மரணத்துக்குப் பிறகும் அவருக்கான ரசிகர்கள் குறையவே இல்லை.

ஏற்கனவே சில முறை இவரின் கதை ஹாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது மீண்டும் ஒருமுறை blonde என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான அனா டி ஆர்மாஸ் மர்லின் மன்றோ வேடத்தை ஏற்றுள்ளார்.

நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

அடுத்த கட்டுரையில்
Show comments