Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் தினம் : வணிக உலகில் வெற்றிக் கொடி நாட்டிய இந்திரா நூயி !

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (17:08 IST)
மகளிர் தினம் : வணிக உலகில் வெற்றிக் கொடி நாட்டிய இந்திரா நூயி !

இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி , பிறப்பு: அக்டோபர் 28, 1955 ஆம் ஆண்டு பிறந்தார். உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சியின் (pepsico ) தலைவர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆக பணியாற்றியவர். 
 
 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி, நூயி, ஸ்டீவன் ரெயின்முந்த் அவர்களுக்குப் பின்னர் அக்டோபர் 1, 2006 முதல் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக செயல்படுவார் என்ற  தகவல் வெளியானது 
 
அதன்பின்னர், 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி, அவர் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதியிலிருந்து தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டார்.  
 
2008 ஆம் ஆண்டிற்கான உலகின் 100 மிக வலிமையான பெண்கள் பட்டியலில் நூயியை மூன்றாவது நபராக போர்பஸ் பத்திரிகை  மதிப்பீடு செய்தது. 
 
அதேபோல் கடந்த, 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கான வணிகத்தில் மிகவும் வலிமையான பெண்கள் மதிப்பீட்டில் நூயியை பிரபல  பார்ச்சுன் பத்திரிகை அதன் முதலிடத்தில் வைத்திருந்தது. 
 
2008 ஆம் ஆண்டு, நூயியின் பெயரை அமெரிக்காவின் சிறந்த தலைவர்களில் ஒருவராக யுஎஸ் நியூஸ் & வேர்ல்டு ரிப்போர்ட் கூறியது.
 
இந்திரா நூயி ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர் என்பது பலருக்கும் தெரியாயது.  அவர் தன் பள்ளிப்படிப்பைச் சென்னையிலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் AIHSS இல் படித்தார்.
 அவர் 1974 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் வேதியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், மேலும் கல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் MBA பட்டம் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். 
 
அவரது முதல் பயணம், இந்தியாவில் நூயியின் தொழில் வாழ்க்கை ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலும் மேட்டூர் பியர்டுசெல் என்ற ஆடை நிறுவனத்திலும் தயாரிப்பு மேலாளர் பொறுப்பு ஏற்றதன் மூலம் ஆரம்பமானது
 
பின்னர்,  1978 ஆம் ஆண்டு அவர் யேல் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பொது மற்றும் தனியார் மேலாண்மை பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
 
நூயி பெப்சிகோநிறுவனத்தில் 1994 ஆம் ஆண்டில் சேர்ந்தார், பின்னர் 2001 ஆம் ஆண்டு தலைவர் மற்றும் CFO ஆக பதவியேற்றார். நூயி அவர்கள் நிறுவனத்தின் உலகளாவிய திட்டத்தை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு வகிக்கிறார். 
 மேலும் 1997 ஆம் ஆண்டு அதன் உணவுவிடுதிகள் விற்பனையை டிரைகானுக்கு மாற்றியது உள்ளிட்ட பெப்சிகோவின் மறுகட்டமைப்பில் முன்னிலை வகித்தார். இதனையடுத்து, கடந்த 2007 ஆம் ஆண்டில் அவர் பெப்சிகோவின் 44 ஆண்டுகால வரலாற்றில் ஐந்தாவது தலைமை நிர்வாக அதிகாரி ஆனதும் உலக அளவில் பெருவாரியான கவனத்தை ஈர்த்தார். பெண்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments