நாயகன் மீண்டும் வர, எட்டுத்திக்கும் பயம்தானே...!!

ஐபிஎல்லின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என அறிவிப்பு.

Webdunia

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் குறித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்பொழுது இருந்தே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது.

கடந்த 2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கமாக இருந்து வந்த ஜடேஜா, சிஎஸ்கேயை வழிநடத்தும் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி வீரராக மட்டுமே களமிறங்குவார் என்று முன்னர் சிஎஸ்கே தெரிவித்திருந்தது.

தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழி நடத்தும் 2வது முழுநேர கேப்டன் என்ற பெருமை ஜடேஜாவுக்கு கிடைத்தது.

பின்னர் 2022 ஆம் ஆண்டு சீசனிலேயே கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா பின் வாங்கி மீண்டும் தோனி கேப்டன் ஆனார்.

2023 ஐபிஎல்லின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என காசி விஸ்வநாதன் அறிவிப்பு.

தோனி கேப்டனாக செய்த சாதனைகள்: போட்டிகள் - 204, வெற்றி - 121, இழந்தது - 82, வெற்றி சதவீதம் - 59.60, கோப்பை வென்றது - 4

ஒரே மேச்... All Rounder தரவரிசையில் Hardik Pandya முன்னிலை!

Follow Us on :-