மனநலம் காக்க சில வழிகள்..! உலக மனநல தினம்!

இன்று உலக மனநல ஆரோக்கிய தினம் காரணம், வழிமுறைகள்..!

Pixabay

உலக மக்கள் தொகையில் 8 பேரில் ஒருவர் மனநல பிரச்சினைகளை சந்திப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மனநலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் தேதி மனநல ஆரோக்கிய நாள் சிறப்பிக்கப்படுகிறது.

பலருக்கு கடன் பிரச்சினை, வீட்டு பிரச்சினை, பணியிடத்தில் பிரச்சினை என பல இடங்களிலும் பிரச்சினைகளை சந்திப்பதால் ஏற்படும் மனசோர்வு உடல்நல பாதிப்பையும் உண்டாக்குவதாக உள்ளது.

மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நண்பர்களிடம், வீட்டில் உள்ளோரிடம் மனம் விட்டு பேசுதல் அவசியம்.

தினமும் மனதை அமைதிப்படுத்தும் வகையில் யோகா, தியானம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

Pixabay

பாடல்கள் கேட்பது, சுடோகு உள்ளிட்ட சிந்திக்கும் வகையிலான விளையாட்டுகளை விளையாடுவது மற்ற அழுத்தங்களில் இருந்து சற்று ஓய்வு அளிக்கும்.

Pixabay

தினமும் நிம்மதியான 8 மணி நேர உறக்கம் தினசரி மன அமைதிக்கு இன்றியமையாத ஒன்று ஆகும். மனசோர்வு, உடல்சோர்வு ஏற்படுவதை நல்ல உறக்கம் தடுக்கும்.

Pixabay

வெளியூர் சுற்றுலா செல்லுதல், மலையேற்றம், நீச்சல் பயிற்சி உள்ளிட்டவை மன அழுத்தத்திற்கான காரணிகளில் இருந்து சற்று இளைப்பாறுதல் தரக்கூடியவை

Pixabay

இன்று உலக இதய தினம்..! இதயத்தை காப்பது எப்படி?

Follow Us on :-