இன்று உலக இதய தினம்..! இதயத்தை காப்பது எப்படி?

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்

மது அருந்துததல், புகைப்பிடித்தல், அல்லது பாக்கெட்டில் வரும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை உடலின் ரத்த அழுத்தம், எடை, சர்க்கரை அளவு ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள், பச்சைப் பயறு, பருப்பு வகைகள், தானியங்கள், பாதாம் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்

போதுமான தூக்கம், அரை மணி நேரம் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு பழக்கம் ஆகியவற்றைப் பின்பற்றுவது இதய நோய்களில் இருந்து காக்கும்.

நம் மனத்தை அமைதியாக வைத்துக்கொள்ளப் பழக வேண்டும். நேர்மறையாக இருக்க பழகுவது, மனம் விட்டு பேசுவது, யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் மன அமைதிக்கு உதவும்.

Various Source

உணவில் மூலிகைகளைச் சேர்ப்பது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். இலவங்கப்பட்டை, பூண்டு, மிளகு, கிராம்பு, இஞ்சி, மஞ்சள் போன்ற பல்வேறு வகையான மூலிகைகள் பல மருத்துவ குணங்கள் கொண்டவை.

உலகிலேயே பாதுகாப்பான டாப் 10 விமானங்கள்

Follow Us on :-