சூரியகாந்தி பூவிலிருந்து பெறப்படும் விதையானது பல்வேறு ஊட்டச்சத்துகளையும், ஆரோக்கிய பண்புகளையும் கொண்டுள்ளது. முக்கியமாக பெண்களுக்கு பல பிரச்சினைகளில் சூரியகாந்தி விதைகள் அவசியமான ஒரு உணவாகும்.
Various Source
சூரியகாந்தி விதையில் புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் ஈ, பி6, நியாசின் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
சூரியகாந்தி விதைகளை காய்கறிகளுடன் வதக்கி அல்லது சாலட்டுகளுடன் கலந்து சாப்பிடலாம்.
சூரியகாந்தி விதையில் உள்ள செறிவான மெக்னீஷியம் சத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சூரியகாந்தி விதைகளை உணவில் பயன்படுத்துவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைகிறது.
சூரியகாந்தி விதைகளில் உள்ள அமிலங்கள் செரிமான சக்தியை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சினையை குறைக்கின்றன.
உடலில் ஆற்றலை அதிகரிக்க சூரியகாந்தி விதையில் உள்ள டயாமின் சத்து உதவுகிறது.