ஆட்டுப்பால் மாட்டுப்பால் எதில் ஊட்டச்சத்து அதிகம்?

தினசரி வாழ்வில் அன்றாடம் தேவையான சத்துக்களை வழங்குவதில் பால் முக்கியமான உணவாகும். பெரும்பாலும் மாட்டுப்பால் உணவாக பயன்படுகிறது. கிராமங்களில் ஆட்டுப்பால், கழுதைப்பாலும் உணவாக பயன்படுகிறது. எதில் என்ன நன்மைகள் உள்ளது என பார்ப்போம்.

Various source

பசும்பால் இயல்பிலேயே இனிப்பு சுவை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது.

பசும்பால் அருந்துவது உடனடி புத்துணர்ச்சியையும், உடல் பலத்தையும் வழங்குகிறது.

மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு உள்ளவர்கள் பசும்பால் அருந்துவது நல்ல மருந்தாக அமையும்.

எருமைப்பால் பசும்பாலை விட குளிர்ச்சியானது. நிறைய கொழுப்பு சத்து கொண்டது.

Various source

ஆட்டுப்பால் மருத்துவ குணம் மிக்கது. குறைவாகவே கிடைக்கக் கூடியது.

இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆட்டுப்பால் நல்லது.

உடல் பருமனாதல், மாதவிடாய் சீராக இல்லாத பிரச்சினைகளை வெள்ளாட்டுப்பால் சரிசெய்ய உதவுகிறது.

ரெயின்போ டயட் என்றால் என்ன? அதனால் என்ன பயன்?

Follow Us on :-