தாவரங்களில் பல மருத்துவ பயன்கள் உள்ளது போல அசைவ உணவுகளிலும் உள்ளது. இஞ்சி, கொத்தமல்லி உள்ளிட்ட மூலிகைகள் போட்டு செய்யப்படும் ஆட்டுக்கால் சூப் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
Various Source
ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் கொலாஜின் உற்பத்தி அதிகரித்து எலும்பு வலுவடைகிறது.
மிளகு சேர்த்த ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நெஞ்சுசலி, இறுமல் பிரச்சினைகள் தீரும்.
குளிர் காலங்களில் ஆட்டுக்கால் சூப் குளிரை போக்குவதுடன், ஜலதோஷ பிரச்சினைகளையும் நீக்குகிறது.
குடலில் ஏற்படக்கூடிய எரிச்சல் மற்றும் செரிமான கோளாறுகளை ஆட்டுக்கால் சூப் குணமாக்குகிறது.
Various Source
அதிகமான புரதம் கொண்ட ஆட்டுக்கால் சூப் பசியின்மையை ஏற்படுத்துவதால் எடை குறைக்க சிறந்தது.
Various Source
ஆனால் ஏற்கனவே உடல் எடை குறைவாக உள்ளவர்கள் சாப்பிடும் முன்னர் ஆட்டுக்கால் சூப் குடிக்காமல் இருப்பது நல்லது.
ஆட்டுக்கால் சூப்பில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் பற்களை ஆரோக்கியமாக்குகிறது.
ஆட்டுக்கால் சூப்பில் உள்ள மூலிகைகள் உடலில் உள்ள நச்சுகள் வெளியேற உதவுகின்றன.
ஆட்டுக்கால் சூப்பில் உள்ள அர்ஜினைன், குளுட்டமைன் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.