பார்ட் டைம் டயட் எனும் 5:2 டயட் என்றால் என்ன?
டயட்டில் இருப்பவர்கள் மத்தியில் தற்போது 5:2 டயட் திட்டத்துக்கு வரவேற்பு அதிகம் கிடைத்துள்ளது.
Pixabay
இந்த டயட் முறையை கடைப்பிடிப்பதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியமாகும்.
'பார்ட் டைம் டயட்' என்பது தான் இந்த 5:2 டயட். அதாவது வாரத்தில் ஐந்து நாட்கள் நன்றாக சாப்பிட்டு இரண்டு நாட்கள் மட்டும் 'டயட்'.
வாரத்தில் ஐந்து நாட்கள் வழக்கமான உணவை சாப்பிடலாம் என்பதற்காக, ஓவராக சாப்பிடக் கூடாது.
ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாளும் 2,000 கலோரிகளைத் தாண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
இதே போல டயட் கடைப்பிடிக்கும் இரண்டு நாட்களில் 500 கலோரிகள் மட்டும் சாப்பிட வேண்டும்.
இந்த டயட் துவக்கத்தில் சிலருக்கு தூக்கமின்மை, தலைவலி, சோர்வு, எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.
மருத்துவரின் ஆலோசனையோடு இதனை கடைப்பிடிப்பதால் இவை பழகப்பழக சரியாகிவிடும்.
5:2 டயட்டைத் தொடர்ந்தால் இதய நோய், அல்சைமர், புற்றுநோய் போன்றவை வரும் வாய்ப்பு குறைவாம்.
lifestyle
New Launch: இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5G! – சிறப்பம்சங்கள் என்ன?
Follow Us on :-
New Launch: இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5G! – சிறப்பம்சங்கள் என்ன?