காரமில்லாத சுவையான தக்காளி குழம்பு செய்வது எப்படி?
தினசரி சமையலில் கண்டிப்பாக இருக்கும் ஒரு பொருள் தக்காளி. சமையலில் பயன்படுத்தப்படும் ஒரே பழம் தக்காளி பழம்தான். இந்த தக்காளியை கொண்டு ஆரோக்கியமான, சுவையான குழம்பு எப்படி செய்வது என பார்ப்போம்.
Various source
தேவையானவை: தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துறுவல், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கடுகு, கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்னர் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
தக்காளி நன்கு வந்தங்கியதும் அதில் சிறுது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
Various source
தேங்காய் துறுவலுடன், வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை கடாயில் உள்ள தக்காளி கிரேவியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றவும்.
பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு தேவையான அளவு போட்டு 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
மசலாக்களின் பச்சை வாசம் போன பின்னர் இறக்கி சாதத்துடன் பறிமாறினால் தளதளக்கும் சுவையான தக்காளி குழம்பு தயார்.