உடலுக்கு பல ஊட்டச்சத்துகளை வழங்கும் தானியங்களில் ஒன்று பாசிப்பருப்பு. இந்த பாசிப்பருப்பை கொண்டு செய்யப்படும் அடை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அளிப்பதுடன் சுவையாகவும் இருக்கும். சுவையான பாசிப்பருப்பு அடை எப்படி செய்வது என பார்க்கலாம்.
Various source
தேவையானவை: பாசிப்பருப்பு 1 கப், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு தேவையான அளவு
பாசிப்பருப்பை சில மணி நேரங்கள் தண்ணீர் ஊற்றி நன்றாக ஊற வைக்க வேண்டும்.
இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி ஆகியவற்றை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்
ஊற வைத்த பாசிப்பருப்புடன் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக அரைத்து அடை மாவு செய்துக் கொள்ள வேண்டும்.
Various source
தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி பாசிப்பருப்பு சேர்த்து அரைத்த மாவை தோசை போல தடிமனாக ஊற்றி எடுக்க வேண்டும்.
தேவைப்பட்டால் சுவைக்காக அடை மாவில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்
அடைக்கு தேங்காய் சட்னி தயார் செய்து தொட்டுக் கொண்டால் கூடுதல் சுவையை தரும்.