கசப்பே இல்லாமல் சுவையான சுண்டைக்காய் சட்னி செய்யலாம்!

கசப்பு சுவையுள்ள சுண்டைக்காய் பல கிராமங்களில் சர்வ சாதாரணமாக கிடைப்பது. உடலுக்கு எதிர்ப்பு சக்தி தருவதிலும், வயிற்றில் புழுக்களை அழித்து சுத்தம் செய்வதிலும் சுண்டைக்காய் முக்கியமானது. சுண்டைக்காயை வைத்து கசப்பு இல்லாத சுவையான சட்னி செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: சுண்டைக்காய், கடலைப்பருப்பு, உளுந்து, பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் துறுவல், தக்காளி, வரமிளகாய், புளி, கொத்தமல்லி

சுண்டைக்காயை கழுவி காம்பு நீக்கி கடாயில் எண்ணெய் விட்டு சுண்டைக்காயை நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுந்து, பூண்டு, வெங்காயம், தேங்காய் துறுவல், கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும்.

அதனுடன் நறுக்கிய தக்காளி, வரமிளகாய், கொஞ்சம் புளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் அதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு வறுத்த சுண்டைக்காயை சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறி விட்டால் சுவையான சுண்டைக்காய் சட்னி தயார்.

சரும அழகு தரும் ஆரோக்கியமான வெள்ளரி சாலட் செய்முறை!

Follow Us on :-