சரும அழகு தரும் ஆரோக்கியமான வெள்ளரி சாலட் செய்முறை!

வெள்ளரிக்காய் வெயில்காலங்களில் உடலுக்கு நீர்ச்சத்தை தருவதுடன், சரும அழகையும் பாதுகாக்க உதவுகிறது. வெள்ளரிக்காயை வைத்து ஆரோக்கியமான சாலட் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் – 2, தக்காளி, வெங்காயம், எலுமிச்சை, மிளகு தூள், ப்ளாக் சால்ட்

வெள்ளரிக்காயை தோல் சீவி வட்ட வடிவமாக பருமனாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

தக்காளி, வெங்காயத்தை நீட்டமாக நைஸாக சீவியது போல நறுக்கிக் கொள்ள வேண்டும்.

நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு எலுமிச்சை சாறு பிழிந்து விட வேண்டும்.

Various Source

அதனுடன் மிளகு தூள் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து கிளறிவிட்டால் சத்தான வெள்ளரிக்காய் சாலட் தயார்.

வெள்ளரிக்காய் சாலட்டில் சுவைக்காக வேண்டுமானால் சிறிது சாட் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.

கோடைக்காலங்களில் வெள்ளரிக்காய் சாலட்டில் தயிர் கலந்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும்.

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா சாம்பார் செய்வது எப்படி?

Follow Us on :-