ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அக்காரவடிசல் செய்வது எப்படி?

ஸ்ரீரங்கத்தில் அக்காரவடிசல் மிகவும் பிரபலமாகும். ஸ்ரீரெங்க நாதருக்கு நிவேத்தியமாக அக்காரவடிசல் படைக்கப்படுகிறது. சுவையான அக்காரவடிசலை வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: பால், நெய், பச்சரிசி, பச்சைப்பருப்பு, வெல்லம், ஏலக்காய்த்தூள்

அரிசி, பருப்பை கழுவி நிழலில் காயவைத்து வாணலியில் நெய்விட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்

ஒரு பங்கு அரிசி, பருப்புக்கு ஐந்து பங்கு பால் சேர்த்து குக்கரில் வைத்து குழைவாக வேகவிட வேண்டும்.

வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் கடைத்து கொதிக்க விட்டு சூடானதும் அரிசி, பருப்பு கரைசலில் சேர்க்க வேண்டும்.

Various Source

பின்னர் இடைவிடாது கிளறிக் கொண்டே ஒரு லிட்டர் பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளறிவிட வேண்டும்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் நெய் சேர்க்கலாம்.

நன்றாக பாயாச பதம் வந்தவுடன் சிறிது ஏலக்காய்போடி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான அக்காரவடிசல் தயார்.

சுவையான ஆந்திரா க்ரீன் சில்லி சிக்கன் செய்வது எப்படி?

Follow Us on :-