சுவையான ஆந்திரா க்ரீன் சில்லி சிக்கன் செய்வது எப்படி?

சிக்கன் பலருக்கும் பிடித்த அசைவ உணவாகும். சிக்கனை வைத்து க்ரில், தந்தூரி என பலவகை உணவுகளை செய்யலாம். அப்படியாக சிக்கனை வைத்து சுவையான க்ரீன் சில்லி சிக்கன் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: சிக்கன், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை, தயிர், வெங்காயம்

வறுத்து தாளிக்க/ மசாலா: மஞ்சள் தூள், கரம் மசாலா, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி

பாத்திரத்தில் சிக்கனுடன் உப்பு, எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.

அதனுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா, அரைத்த வெங்காய விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 மணி நேரம் ஊற விடவும்

Various Source

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கி அதையும் சிக்கன் கலவையுடன் சேர்க்க வேண்டும்.

கொத்தமல்லி, புதினாவை நன்றாக அலசி மிக்ஸியில் போட்டு மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த கொத்தமல்லி, புதினா மசாலவையும் சிக்கன் கலவையுடன் சேர்த்து தண்ணீர் வற்றி வரும் வரை வேகவைக்க வேண்டும்.

இறுதியாக கீறிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி கலந்து இறக்கினால் கமகமக்கும் ஆந்திரா க்ரீன் சில்லி சிக்கன் தயார்.

Various Source

சபரிமலை ஸ்பெஷல் அரவணை பாயாசம் செய்வது எப்படி?

Follow Us on :-