சபரிமலை ஸ்பெஷல் அரவணை பாயாசம் செய்வது எப்படி?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் பிரபலமான பிரசாதம் அரவணை பாயாசம். இந்த அரவணை பாயாசத்தை சுவை மாறாமல் வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: கேரளா அரிசி, பொடித்த வெல்லம், சுக்குப்பொடி, ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகள், நெய்

அரை கப் கேரள அரிசியை கழுவி ஊற வைத்து முக்கால் பதம் வேகவைத்து வடித்துக் கொள்ள வேண்டும்.

பொடித்த வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கரையும் அளவிற்கு சூடுபடுத்த வேண்டும்.

ஒரு வாணலியில் வேகவைத்த சாதம் போட்டு அதனுடன் 2 ஸ்பூன் நெய் சேர்த்து மெதுவாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

Various Source

இப்போது அதனுடன் வெல்லம் கரைத்த தண்ணீரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

அதில் ஏலக்காய் மற்றும் சுக்குப்பொடி சேர்த்து, நெய்யில் வறுத்த சீவிய தேங்காய் துணுக்குகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கடைசியாக ஒரு கரண்டி நெய் விட்டு கலக்கி இறக்கினால் சுவையான சபரிமலை அரவணை பாயாசம் தயார்.

கருகருவென முடி வளர கறிவேப்பிலை துவையல்!

Follow Us on :-