சிறப்பான வாழ்வு தரும் சித்த மருத்துவ குறிப்புகள்..!

அனைத்து வகை தாவரங்களிலும் இருக்கும் மருத்துவ குணங்களை கொண்டு நோயை தடுக்கும் முறையை பல ஆண்டுகள் முன்னரே சித்தர்கள் கண்டறிந்தனர். அவை சித்த மருத்துவமாக இன்று பயன்பட்டு வருகிறது.

Various Source

சொறி, சிரங்கு பிரச்சினைகளுக்கு குப்பைமேனி இலையையும், உப்பையும் சேர்த்து அரைத்து தேய்த்து வர சரியாகும்.

கிராம்பை தண்ணீர் விட்டு மை போல அரைத்து நெற்றி மற்றும் மூக்கு தண்டில் பற்று போட தலைவலி, நீரேற்றம் குணமாகும்.

கரிசாலைச் சாறுடன் தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு வரும் நீர்க்கோவை குணமாகும்.

கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் உள்ள இடத்தில் கட்டினால் சரியாகும்.

Various Source

கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் தடவி வாய் கொப்பளித்தால் வீக்கம் குறையும்.

Various Source

பிஞ்சு கடுக்காய், சுக்கு சம அளவு எடுத்து நீரில் காய்ச்சி இரவில் தூங்கும் முன் குடித்தால் மலச்சிக்கல் சரியாகும்.

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் பன்னீர், சந்தனம் அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

புதினா இலையை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது..?

Follow Us on :-