தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி - 1 1/2 கப், உருளைக்கிழங்கு - 2, வேர்க்கடலை - 3/4 கப், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் , கொத்தமல்லி, உப்பு, எண்ணெய்
செய்முறை: 1. ஜவ்வரிசியை கழுவி அதில் 1/4 கப் நீரை ஊற்றி குறைந்த பட்சம் 2 மணிநேரம் ஊற வைத்துவிடவும்.
2. இந்த சமயத்தில் உருளைகிழங்கை வேக வைத்து மசித்துக்கொள்ளவும், பின்னர் வேர்க்கடலையை வறுத்து தோலுறித்து பொடியாக்கிக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி, மசித்த உருளைக்கிறங்கு, பொடியாக்கிய வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.
4. தயாராகிய கலவையை வடையாக தட்டையாக தட்டி ஒரு தட்டில் வைத்து, ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைக்கவும்.
5. பின்னர் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி வடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் ஜவ்வரிசி வடை ரெடி.