உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க புரோட்டீன் நிறைத்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். பலவித புரோட்டீன் நிறைந்த பொருட்களையும் கொண்டு ப்ரோட்டீன் பொரியல் கலவை செய்வது எப்படி என பார்ப்போம்.
Various Source
தேவையான பொருட்கள்: பட்டாணி, பீன்ஸ், தக்காளி, காரட், வெங்காயம், குழம்பு மசாலா, மஞ்சள் தூள், சோம்பு, மல்லித்தழை
தக்காளி, வெங்காயம், காரட்டை நன்றாக கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
அதன்பின் வெட்டிய காய்கறிகள், பட்டாணி, பீன்ஸ் போட்டு குழம்பு மசாலா சேர்த்து கிளறவும்.
பிறகு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.
10 நிமிடம் மிதமான சூட்டில் காய்கறிகள், பட்டாணி வெந்த பின்னர் எடுத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.