கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பலருக்கும் அடிக்கடி தாகம் ஏற்படுவது வாடிக்கை. அவ்வாறு நீர்ச்சத்து இழக்கும்போதும், தாகமாக இருக்கும்போது ஒரு கிளாஸ் புதினா இஞ்சி லெமன் சர்பத் குடித்தால் தாகம் குறைவதுடன் புத்துணர்ச்சி கிடைக்கும்.
Various Source
தேவையான பொருட்கள்: எலுமிச்சைபழம், இஞ்சி, புதினா, நன்னாரி சர்பத், உப்பு,
எலுமிச்சையை சாறு பிழிந்து, சீவிய சிறுதுண்டு இஞ்சி, நன்னாரி சர்பத் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
பின்னர் புதினா இலை, ஒரு சிட்டிகை உப்பு, சிறிது எலுமிச்சை தோல் சேர்த்து மீண்டும் நன்றாக அரைக்கவும்.
பின்னர் அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும்.
Various Source
பின்னர் அதை ப்ரிட்ஜில் வைத்து நல்ல கூலிங்கில் எடுத்து அதன் மேல் ஒரு புதினா இலையை கிள்ளி போடவும்
இப்போது வெயிலுக்கு இதமான, ஆரோக்கியமான புதினா இஞ்சி லெமன் சர்பத் தயார்.