பொங்கல் ஸ்பெஷல்: வரகரிசி பால் பொங்கல் செய்யலாம் வாங்க!

தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நாளில், தமிழர் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான வரகு அரிசியில் பொங்கல் செய்து அசத்துவது எப்படி என பார்ப்போம்.

Webdunia

தேவையான பொருட்கள்: வரகு அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், பால், தேங்காய் துருவல், நெய் முந்திரி, ஏலக்காய், ஜாதிக்காய் பொடி,

வாணலியில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

பாசிப்பருப்பை நன்றாக கழுவி நெய் ஊற்றி வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

வெல்லத்தில் நீர் விட்டு பாகு காய்ச்சி வடிக்கட்டி வைக்க வேண்டும்

Webdunia

அடி கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி நன்றாக கொதித்து வரும்போது அதில் வரகரிசி, பாசிப்பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றவும்

வரகரிசி நன்றாக குழைந்து வரும்போது வெல்லப்பாகை அதில் சேர்க்கவும்

பின்னர் நெய், தேங்காய் துறுவல், ஏலக்காய், ஜாதிக்காய் பொடி, நெய்யில் வறுத்த கலவையை சேர்த்து இறக்கவும்.

இப்போது சுவையான சூப்பரான வரகு அரிசி பால் பொங்கல் தயார். இதில் வெல்லம் சேர்க்காமல் வெண் பொங்கலாகவும் செய்யலாம்

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் தரும் நன்மைகள்!

Follow Us on :-