உணவுக்கு சுவையையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கக்கூடியது சின்ன வெங்காயம். இந்த சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
Various source
சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
சின்ன வெங்காயத்தில் உள்ள காரத்தன்மை செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
சின்ன வெங்காயம், தேன் இரண்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் கலந்து சாப்பிடுவது நன்மை தருகிறது.
தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிடும்போது தூக்கமின்மை குறைபாடுகள் நீங்கும்.
சின்ன வெங்காயம், தேன் கலவை நாள்பட்ட நெஞ்சு சளி போன்றவற்றை போக்க உதவுகிறது.
சின்ன வெங்காயத்துடன் தேனை கலந்து சாப்பிடும்போது கெட்ட கொழுப்புகளை குறைத்து தொப்பை குறைக்க உதவுகிறது.