சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் சத்தான உணவுகள்!
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அன்றாட உணவில் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. சில உணவு வகைகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்பதால் அவற்றை உண்பது உடலுக்கு நலம் பயக்கும்.
Various Source
பாகற்காயில் கால்சியம், இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் செறிந்துள்ளதால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
நட்ஸ் எனப்படும் பருப்பு வகைகளில் ஒமேகா 3, விட்டமின்கள், தாதுக்கள் உள்ளதால் இன்சுலின் சுரப்பு சீராகிறது.
பீன்ஸ் வகைகளில் நார்ச்சத்து, புரோட்டீன் நிறைந்துள்ளதால் ரத்தத்தை சுத்திகரித்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை, நார்த்தங்காய், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றன.
Various Source
க்ரீன் டீயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
Various Source
நாவல் பழ கொட்டைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்து வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.