காலை நேரத்தில் ராகி கூழ் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்!
தமிழ் மக்களின் பாரம்பரிய உணவுகளில் ராகி முக்கியமான ஒன்று. நமது முன்னோர்கள் காலை ராகி கூழ் அருந்தி வலிமையையும், ஆரோக்கியத்தையும் பெற்றார்கள். ராகியில் உள்ள பயன்களை தெரிந்து கொள்வோம்..
Various Source
ராகியில் அதிகமாக உள்ள கால்சியம் சத்து எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்குகிறது.
கோடைக்காலங்களில் காலையில் ராகி கூழ் குடித்தால் உடல் வெப்பம் குறைத்து குளிர்ச்சி உண்டாக்கும்.
ராகியில் உள்ள கனிமச் சத்துகளும், புரதச் சத்துகளும் உடலுக்கு வலிமையை அளிக்கிறது.
ராகியில் உள்ள அமினோ அமிலங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
Various Source
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதால் ராகி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு
Various Source
காலையில் ராகி சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து இதயத்திற்கு நன்மை செய்கிறது.
மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் ராகி தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும்.