கீரை வகைகள் உடலிற்கு பல்வேறு நலன்களை அளிக்கக்கூடியவை. அந்த கீரைகளில் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுவதுதான் காசினிக் கீரை. இதை காணாம்கோழிக் கீரை என்றும் அழைப்பர்.
Various Source
காசினிக் கீரையோடு தூதுவளை, பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் வெயில்கால உடல்சூடு தணியும்.
காசினிக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
காசினிக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து கொண்டால் உடலில் தாதுவை விருத்தி செய்து வலு கொடுக்கும்.
காசினிக் கீரையை பொடி செய்து தண்ணீரில் கலந்து தினம் காலை வெறும் வயிற்றில் குடித்தால் நீரிழிவு கட்டுப்படும்.
Various Source
பாசிப்பருப்புடன், காசினிக் கீரையை கடைந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தை சுத்திகரித்து எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
Various Source
நாள்பட்ட புண்கள் குணமாக காசினிக் கீரையை அரைத்து பற்றாக போட்டு வர காயங்கள் குணமாகும்.
காசினிக் கீரையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் சரியாகும்.