அருநெல்லி தரும் அற்புதமான மருத்துவ பலன்கள்!

மிகவும் புளிப்பு சுவை கொண்ட பலரால் விரும்பி உண்ணப்படும் அருநெல்லி (அரை நெல்லி) பல்வேறு நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

Various Source

சிறியதாகவும், புளிப்பு சுவை உடையதுமான அருநெல்லி, அரை நெல்லி, நட்சத்திர நெல்லி, சின்ன நெல்லி என பல பெயர்களில் கூறப்படுகிறது.

அருநெல்லியில் விட்டமின் சி, பி1, சபோனின், டானின்கள், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகிய சத்துகள் மிகுதியாக உள்ளன.

நெல்லிக்காயில் உள்ள சபோனின் சத்து குடல் அதிகமாக கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதை தடுக்கிறது.

நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் மூலநோய் ஆகியவற்றை குணமாக்கி மலமிளக்கியாக செயல்படுகிறது.

Various Source

அருநெல்லியில் உள்ள விட்டமின் சி உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்கிறது.

நெல்லியில் உள்ள ஆண்டிஆக்ஸிடெண்ட்டுகள் சருமம் மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்க உதவுகின்றன.

அருநெல்லியில் உள்ள இரும்புச்சத்தும், கால்சியமும் எலும்புகளை அடர்த்தியாகவும், வலுவாகவும் ஆக்குகின்றது.

கசப்பு இல்லாத பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி?

Follow Us on :-