கசப்பு இல்லாத பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி?

பாகற்காயில் பல நோய்களையும் எதிர்க்கும் பண்பு உள்ளது. பாகற்காய் கசப்பாய் இருப்பதால் பலரும் சாப்பிட விரும்புவதில்லை. பாகற்காயை வைத்து சுவையான சாம்பார் எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: பாகற்காய், துவரம் பருப்பு, கடலை பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், தேங்காய் துறுவல், புளி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.

முதலில் பாகற்காயை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வைக்க வேண்டும்.

கடலை பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், தேங்காய் துறுவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு நன்றாக தாளித்துக் கொள்ள வேண்டும்.

Various Source

பிறகு அதில் பாகற்காய் துண்டுகளை போட்டு சுருள வதக்க வேண்டும்.

Various Source

பின்னர் அதில் புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

நல்ல கொதி வந்த பிறகு அரைத்த கலவை மற்றும் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து சிறிது கொதிக்க விட வேண்டும்.

பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆரோக்கியமான பாகற்காய் சாம்பார் தயார்.

எந்த சீஸை எந்த உணவுக்கு பயன்படுத்த வேண்டும்?

Follow Us on :-