பாலில் எந்த மூலிகை சேர்த்தால் என்ன பயன் தெரியுமா..?
ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கிய பாலில் சில பொருட்களை கலந்து குடிக்கும்போது கூடுதல் பயன்களும், மருத்துவ நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றது. அது என்ன என்று தெரிந்து கொள்வோம்.
Various Source
பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் குணமாகும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பாலில் பூண்டு கலந்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
நுரையீரல் அழற்சி உள்ளவர்கள் பூண்டு பால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பாலில் இஞ்சி கலந்து குடித்தால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கும்.
Various Source
இஞ்சி பால் குடிப்பதால் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கப்படுவதுடன் இதய ஆரோக்கியம் மேம்படும்.
பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்
மஞ்சள் பால் இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
பெருஞ்சீரகம் கலந்த பாலை குடிப்பதால் மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படாமல் தடுக்கலாம்.