குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே ஆரோக்கியமான உணவுகளை அளிப்பதால் அவர்களது உடல் மற்றும் மூளை ஆரோக்கியமானதாக மாறுகிறது. குழந்தைகளுக்கு இந்த 5 உணவுகள் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை..!
Various Source
குழந்தைகளுக்கு தேவையான கால்சியம், புரதச்சத்து பாலில் உள்ளது. இது குழந்தைகளின் எலும்புகள், பற்களை வலுவாக்கும்.
வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகிய சத்துகள் சிறுநீரகம், இதய பாதுகாப்பிற்கு அவசியம்.
முட்டையில் தாதுச்சத்துக்கள், விட்டமின்கள் நிறைந்துள்ளன. ஒரு முட்டை மூலம் பல ஊட்டச்சத்துக்கள் குழந்தைக்கு கிடைக்கும்.
முந்திரி, நிலக்கடலை, பாதாம் உள்ளிட்ட பருப்புகளில் உள்ள ஊட்டச்சத்துகள் குழந்தைகளுக்கு தேவையான கொழுப்பை உற்பத்தி செய்கின்றன.
Various Source
உலர் திராட்சையில் உள்ள இரும்புச்சத்து, நார்ச்சத்து குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கிறது.
Various Source
தக்காளி, பீன்ஸ், வெள்ளரி உள்ளிட்ட காய்கறி மற்றும் பழ வகைகளையும் குழந்தைகள் சாப்பிட பழக வேண்டும்
குழந்தைகளுக்கு வெளி தின்பண்டங்களை வாங்கி தருவதை விட ஆரோக்கிய உணவுகளை தருவது சிறந்தது.