உடலுக்கு சத்துத்தரும் ஆட்டு ரத்தப் பொறியல் செய்வது எப்படி?
அசைவ உணவுகளில் உடலுக்கு சத்துக்கள் பல தரும் உணவாக ஆட்டிறைச்சி உள்ளது. ஆட்டின் ரத்தம் கொண்டு செய்யப்படும் பொறியல் சுவையானதும், சத்துக்கள் கொண்டதுமாகும். சுவையான ரத்தப் பொறியல் எப்படி செய்வது என பார்ப்போம்
Various Source
தேவையான பொருட்கள்: ஆட்டு ரத்தம், சின்ன வெங்காயம், வரமிளகாய், சீரகம், பொட்டுக்கடலை, கடுகு, தேங்காய் துறுவல், கறிவேப்பிலை,
ரத்தத்தை நன்றாக கழுவி விட்டு, உப்பு போட்டு கட்டியில்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வரமிளகாய் போட்டு தாளிக்க வேண்டும்
பின்னர் அதில் பிசைந்து வைத்த ரத்தத்தை போட்டு மிதமான சூட்டில் கிளறிவிட வேண்டும்.
ரத்தம் தண்ணீர் வற்றி உதிரியானதும் தேங்காய் துறுவல் போட்டு கிளற வேண்டும்.
ரத்தப்பொறியல் ருசியானதும், உடலுக்கு பல சத்துக்களை தருவதும் ஆகும்.