புதினா கொத்தமல்லி சூப்பர் துவையல் செய்முறை!

புதினா, கொத்தமல்லி ஆகியவற்றின் மருத்துவ குணங்கள் சளி, இறுமலை விரட்டுவதுடன் எதிர்ப்பு சக்தியையும் அளிப்பவை. சுவையான ஆரோக்கியமான புதினா கொத்தமல்லி துவையல் செய்வது எப்படி என பார்ப்போம்!

Various Source

தேவையான பொருட்கள்: ஒரு கட்டு புதினா, ஒரு கட்டு கொத்தமல்லி, 2 காய்ந்த மிளகாய், 2 பச்சை மிளகாய்

தேவையானவை: புளி, 3 பல் பூண்டு, பெருங்காயம், உளுந்து, உப்பு தேவையான அளவு

புதினா, கொத்தமல்லியை நன்றாக நீரில் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

Various Source

பின்னர் அதில் புதினா, கொத்தமல்லி இலைகளை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

Various Source

இவற்றுடன் பெருங்காயம், புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது சுவையான கொத்தமல்லி புதினா துவையல் தயார்.

பனை வெல்லம் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

Follow Us on :-