பழங்காலம் முதலாக தமிழர்கள் இனிப்பு பொருளாக பயன்படுத்தி வந்தது வெல்லம். பனையிலிருந்து செய்யப்படும் பனை வெல்லம் உடலுக்கு பல நன்மைகளையும் அளிக்கக் கூடியதாக உள்ளது. அதுகுறித்து அறிவோம்.
Various Source
பனை வெல்லத்தில் இயற்கையான இனிப்பு சுவையுடன் இரும்புச்சத்தும், விட்டமின்களும் உள்ளது.
பாலில் பனை வெல்லம் அல்லது கற்கண்டை கலந்து குடித்தால் தொண்டை கரகரப்பு தீரும்
வாதம், பித்தம் பிரச்சினைகளுக்கு பனை வெல்லம் நல்ல மருந்தாகும்.
அதிக உணவு எடுத்துக் கொள்ளும்போது எளிதில் சீரணமாக பனைவெல்லம் பயன்படுகிறது.
Various Source
இனிப்பு பதார்த்தங்கள் செய்ய வெள்ளை சர்க்கரையை விட பனை வெல்லம் நல்லது.
Various Source
வெள்ளை சக்கரையை விட 40 சதவீதம் அதிக தாதுக்கள் பனை வெல்லத்தில் உள்ளது
பனை வெல்லத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் உடலில் புதிய செல்கள் அதிகம் உருவாவதை ஊக்குவிக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பனை வெல்லத்தை அதிகமாக எடுப்பதை தவிர்ப்பது நல்லது.