கற்பூரவல்லியின் கணக்கற்ற மருத்துவ பயன்கள்!

பல்வேறு சிறிய உடல்நல கோளாறுகளை தீர்க்கக் கூடிய மூலிகை வகைகளில் ஒன்று கற்பூரவல்லி. கற்பூரவல்லி எந்தெந்த பிரச்சினைகளை குணப்படுத்துகிறது என்பதை அறிவோம்.

Various Source

கற்பூரவல்லி இலைகளை கசக்கி சாறு பிழித்து சொறி, அரிப்பு உள்ள பகுதிகளில் விட்டு வந்தால் குணமாகும்.

கற்பூரவல்லி இலைச்சாறுடன், துளசி சாறு சேர்த்து 5 மி.கி அளவு சாப்பிட்டு வர மார்புச்சளி குணமடையும்.

சாப்பாடு செரிமானமாகாவிட்டால் கற்பூறவல்லி இலை சாறை கொஞ்சமாய் பருக செரிமான பிரச்சினை நீங்கும்.

கற்பூரவல்லி இலைச்சாறு குடித்து வர சிறுநீரகங்களில் சேரும் உப்புகள் கரையும்.

Various Source

வெயில் காலங்களில் லெமன், ஆரஞ்சு பழச்சாறுகளில் கொஞ்சம் கற்பூரவல்லி இலை போட்டு குடித்தால் உற்சாகம் கிடைக்கும்.

Various Source

கற்பூரவல்லி இலையை எண்ணெய்யில் வதக்கி தொண்டையில் தடவி வந்தால் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக ஆலோசனைகளுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

பலவித நன்மைகளை தரும் பாலக் கீரை!

Follow Us on :-