வண்டிக்கடைகளில் விற்கப்படும் மசாலா சுண்டல் பலருக்கு விருப்பமாக இருக்கும். சுவையான சூப்பரான வண்டிக்கடை ஸ்டைல் மசாலா சுண்டலை வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம்.
Various source
தேவையான பொருட்கள்: பட்டாணி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், எண்ணெய்
பட்டாணியை முதல் நாளே ஊற வைத்து எடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட்டை பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
Various source
அதனுடன் அரைத்த வெங்காயம், தக்காளி கலவையை சேர்க்க வேண்டும்.
இந்த கலவையுடன் அவித்த சுண்டலை சேர்த்து தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.