உடலை உறுதியாக்கும் கடலை பர்பி எளிதாக செய்யலாம்!

கடலையில் கால்சியம் நிறைய உள்ளதால் எலும்பை வலுவாக்கும். கடலை, வெல்லம் மட்டும் சேர்த்த ஆரோக்கியமான கடலை பர்பியை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various source

தேவையான பொருட்கள்: வேர்க்கடலை – 2 கப், வெல்லம் – ஒன்றரை கப், நெய் – 2 கரண்டி

ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் வேர்க்கடலையை சேர்த்து எண்ணெய் விடாமல் வறட்டு வறுவலாக மிதமான தீயில் வறுக்க வேண்டும்

வறுத்த வேர்க்கடலையை சிறு துண்டுகளாக இருக்கும் படி மேலோட்டமாக அரைத்துக் கொள்ள வேண்டும்

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒன்றரை கப் வெல்லம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக வெல்லப்பாகு தயார் செய்ய வேண்டும்

Various source

வெல்லப்பாகு தயாரானதும் அதனுடன் பொடியாக அரைத்த வேர்க்கடலையை கொட்டி கிளற வேண்டும்.

பின்னர் ஒரு தட்டில் நெய் தடவி கடலை பாகை ஊற்றி ஆற வைத்து துண்டுகளாக வெட்டி எடுத்தால் சுவையான கடலை பர்பி தயார்.

கடலை பர்பியை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ஏராளமான சத்துகளை கொண்டது கடலை பர்பி

சுவையான சுழியம் ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்!

Follow Us on :-