மகாசிவராத்திரி ஸ்பெஷல் விரத பாயாசம் செய்வது எப்படி?
மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு விரதம் இருப்பது சிறப்புகள் தரும். இந்த விரத நாட்களில் விரத பாயாசம் செய்வது கூடுதல் சிறப்பை தரும். சிவராத்திரி ஸ்பெஷல் பாயாசம் செய்வது எப்படி என பார்ப்போம்.
Various source
தேவையான பொருட்கள்: கால் கப் பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் பால், தேங்காய் துறுவல், முந்திரி, திராட்சை, ஏலக்காய்
பாத்திரத்தில் பாசிப்பருப்பை வேகவைத்து அதனுடன் வெல்லம் சேர்த்து கரையும் வரை ந்ன்றாக கிளறி விட வேண்டும்.
வெல்லம் நன்றாக கரைந்ததும் அதனுடன் தேங்காய் பால் சேர்த்து குறைவான தீயில் வைக்க வேண்டும்
பிறகு ஏலக்காய் தட்டி சேர்த்து பாயாசம் கொதிக்க தொடங்கியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்
ஒரு சிறிய வாணலியில் நெய் விட்டு கொதி வந்தவுடன் முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் தேங்காய் துறுவலை பாயாசத்துடன் சேர்த்து கிளறினால் சுவையான பாயாசம் தயார்.